Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1151

இன்பத்துப்பால்கற்பியல்116. பிரிவாற்றாமை

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க் குரை.

sellAmai uNTEl enakkurai maRRuninvalvaravu vAzhvArk kurai

Kanishta Mohan

பொருள் / உரை

முருகா எளிய உரை

'உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்' என்று பிரிந்து செல்லாத செய்தி இருந்தால் அதை என்னிடம் சொல்; மாறாகப் பிரிந்து சென்று விரைந்து திரும்புவேன் என்று விடைபெற நினைத்தால், நீ வரும் வரை உயிரோடு இருக்கும் திறன் படைத்தவர்களிடம் அதைச் சொல்!

• செல்லாமை உண்டேல் எனக்கு உரை = 'உன்னைப் பிரிய மாட்டேன்' என்று செல்லாத நிலை இருந்தால் அதை என்னிடம் சொல்;• மற்று நின் வல்வரவு = மாறாகப் பிரிந்து சென்று விரைந்து திரும்பி வருவேன் என்று சொல்ல நினைத்தால்,• வாழ்வார்க்கு உரை = நீ திரும்பி வரும் வரை உயிரோடு இருக்கக் கூடியவர்களிடம் அதைச் சொல்!

மு.வரதராசன்

பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

பரிமேலழகர்

(பிரிந்து கடிதின் வருவல் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.) செல்லாமை உண்டேல் எனக்கு உரை - நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல். (தலைமகளை ஒழித்து 'எனக்கு' என்றாள், தான் அவள் என்னும் வேற்றுமை அன்மையின். அக்கால மெல்லாம் ஆற்றியிருந்து அவ்வரவு காணவல்லளல்லள்; பிரிந்தபொழுதே இறந்துபடும் என்பதாம். அழுங்குவித்தல்: பயன், இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

Meaning in English

If you will say, 'I leave thee not,' then tell me so; Of quick return tell those that can survive this woe

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout