தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்கெளவை எடுக்கும்இவ் வூர்.
tAmvENTin nalkuvar kAtalar yAmvENTumkauvai eTukkumiv vUr
Malavika Rajhesh
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடுக்கும் = எங்களது திருமணம் விரைந்து நடப்பதற்கு நாங்கள் விரும்பிய அலர் பேச்சை இந்த ஊராரே பரப்புகின்றனர்;• காதலர் தாம் வேண்டின் நல்குவர் = இனி என் காதலர் மனம் விரும்பினால் இந்த அலரைக் கொண்டே என்னை விரும்பித் திருமணம் செய்துகொள்வார்!எளிய விளக்கம்:எங்களது திருமணம் விரைவில் நிகழ்வதற்கு நாங்கள் விரும்பிய அலர் பேச்சை இந்த ஊர்மக்களே எடுத்துப் பேசுகின்றனர்; இனி என் காதலர் மனம் விரும்பினால் இந்த அலரையே காரணமாகக் கொண்டு விரைந்து என்னை மனைவியாக ஏற்றுக்கொள்வார்!
மு.வரதராசன்
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
பரிமேலழகர்
(தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச் சொல்லியது.) யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடுக்கும் - உடன் போகற்கு ஏதுவாகல் நோக்கி யாம் பண்டே விரும்புவதாய அலரை இவ்வூர்தானே எடாநின்றது; காதலர் தாம் வேண்டின் நல்குவர் - இனிக் காதலர் தாமும் யாம் வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர், அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நம்கண் காதல் உடைமையின் மறார்' என்பது தோன்றக் 'காதலர்' என்றாள். இவ்விருபது பாட்டும் புணர்தல் நிமித்தம்.)
சாலமன் பாப்பையா
நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.
Meaning in English
If we desire, who loves will grant what we require; This town sends forth the rumour we desire





