அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்பலர்நாண நீத்தக் கடை.
alarnANa olvatO anjsalOm penRArpalarnANa nIttak kaTai
Priyadarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
'உன்னை ஒருநாளும் பிரியேன், அஞ்சாதே' என்று அன்று வாக்குக் கொடுத்த என் காதலர், காண்பவர் பலரும் வெட்கப்படும்படி என்னைப் பிரிந்து சென்ற பிறகு, இந்த ஊரார் தூற்றும் அலர் பேச்சுகளுக்கு நான் அஞ்சி நாண முடியுமா?
• அஞ்சல் ஓம்பு என்றார் = 'உன்னை ஒருபோதும் பிரியேன், அஞ்சாதே' என்று உறுதி கூறிய என் காதலர்;• பலர் நாண நீத்தக் கடை = கண்டவர் பலரும் வெட்கி நாணும்படியாக என்னைப் பிரிந்து சென்ற பிறகு;• அலர் நாண ஒல்வதோ = இந்த ஊரார் பேசும் அலர் பழிச்சொல்லுக்கு நான் அஞ்சி நாண முடியுமா? (நாண முடியாது).
மு.வரதராசன்
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.
பரிமேலழகர்
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள். அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) அஞ்சல் ஒம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை - தம்மை எதிர்ப்பட்ட ஞான்று 'நின்னிற் பிரியேன் அஞ்சல் ஒம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாணா ஒல்வதோ - நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது. ('நாண' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல் யாண்டையது'? என்பதாம்.)
சாலமன் பாப்பையா
அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?
Meaning in English
When he who said 'Fear not!' hath left me blamed, While many shrink, can I from rumour hide ashamed





