Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1148

இன்பத்துப்பால்களவியல்115. அலரறிவுறுத்தல்

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்காமம் நுதுப்பேம் எனல்.

neyyAl erinutuppEm enRaRRAl kauvaiyAlkAmam nutuppEm enal

Prema Faridha

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஊராரின் பழிச்சொற்களைக் கொண்டு எங்களது காதலை அணைத்து விடலாம் என்று எண்ணுவது, கொழுந்துவிட்டு எரியும் தீயில் நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்க முயல்வதைப் போன்ற மூடத்தனமான செயலாகும்!

• கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் = ஊரார் பேசும் அலர் பேச்சால் எங்களது காதலை அணைத்து விடலாம் என்று நினைப்பது;• நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று = கொழுந்துவிட்டு எரியும் தீயில் நெய்யை ஊற்றி நெருப்பை அணைத்து விடலாம் என்று நினைப்பதற்கு ஒப்பானதாகும்!

மு.வரதராசன்

அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) கௌவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும். (மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.)

சாலமன் பாப்பையா

இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.

Meaning in English

With butter-oil extinguish fire! 'Twill prove Harder by scandal to extinguish love

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout