Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1147

இன்பத்துப்பால்களவியல்115. அலரறிவுறுத்தல்

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்நீராக நீளும்இந் நோய்.

Uravar kauvai eruvAka annaisolnIrAka nILumin nOy

Charumathi

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஊர்ப் பெண்கள் தூற்றும் பழிச்சொற்கள் நல்ல உரமாகவும், என் தாய் சினந்து பேசும் தடுக்கும் சொற்கள் பாய்ச்சும் நீராகவும் அமைய, என் உள்ளத்தில் விளைந்த காதலாகிய பயிரானது மேலும் மேலும் செழித்து உயர்ந்து வளர்கிறது!

• ஊரவர் கௌவை எருவாக = இந்த ஊர்ப் பெண்கள் தூற்றும் பழிச்சொற்கள் உரமாகவும் (எருவாகவும்),• அன்னை சொல் நீராக = அதைக் கேட்டு என் தாய் சினந்து பேசும் கடுமையான சொற்கள் நீராகவும் அமைய;• இந்நோய் நீளும் = என் நெஞ்சில் உள்ள காதல் பயிரானது மேலும் மேலும் செழித்து வளர்கிறது!

மு.வரதராசன்

இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

பரிமேலழகர்

(வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும் எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது.) இந்நோய் - இக்காம நோயாகிய பயிர்; ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் - இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளராநின்றது. ('ஊரவர்' என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது. ஏக தேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம். வரைவானாதல் பயன்.)

சாலமன் பாப்பையா

இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.

Meaning in English

My anguish grows apace: the town's report Manures it; my mother's word doth water it

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout