Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1145

இன்பத்துப்பால்களவியல்115. அலரறிவுறுத்தல்

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்வெளிப்படுந் தோறும் இனிது.

kaLittoRum kaLLuNTal vETTaRRAl kAmamveLippaTun tORum initu

Sreejith Sreekumaran Nair

பொருள் / உரை

முருகா எளிய உரை

கள் உண்பவர்கள் போதை மிக மிக மேலும் மேலும் கள்ளையே விரும்பிப் பருகுவது போல, எங்கள் காதலானது ஊராரின் அலர் பேச்சால் வெளிப்பட வெளிப்பட என் நெஞ்சத்திற்கு மேலும் மேலும் இனிய இன்பமாக மாறுகிறது!

• களித்தொறும் கள் உண்டல் வேட்டற்று = மது அருந்துபவர்கள் போதை ஏற ஏற மேலும் மேலும் குடிக்க விரும்புவதைப் போல;• காமம் வெளிப்படுந்தோறும் இனிது = எங்கள் காதலானது ஊராரின் அலரால் வெளிப்பட வெளிப்பட எனக்குப் பேரினபமாகத் திகழ்கிறது!

மு.வரதராசன்

காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) களித்தொறும் கள் உண்டல் வேட்டற்று - கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது - எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகா நின்றது. ('வேட்கப்பட்டடற்றால்' என்பது 'வேட்டற்றால்' என நின்றது. வேட்கை மிகுதியால் அலரும் இன்பஞ் செய்யாநின்றது என்பதாம்.)

சாலமன் பாப்பையா

கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

Meaning in English

The more man drinks, the more he ever drunk would be; The more my love's revealed, the sweeter 'tis to me

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout