Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1142

இன்பத்துப்பால்களவியல்115. அலரறிவுறுத்தல்

மலரன்ன கண்ணாள் அருமை அறியாதுஅலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

malaranna kaNNAL arumai aRiyAtalaremak kIntativ vUr

Rahul Nambiar

பொருள் / உரை

முருகா எளிய உரை

மலர் போன்ற விழிகளையுடைய என் காதலியை முறைப்படி அடைவதற்கு உள்ள அரிய தடைகளை அறியாமல், இந்த ஊரார் எங்கள் காதலைப் பற்றி அலர் பேசி, எங்களது திருமணத்திற்கு மறைமுகமாகப் பெரும் நன்மையையே செய்துவிட்டது!

• மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது = மலர் போன்ற கண்களையுடைய என் காதலியை அடைவதற்கு உள்ள அரிய தடைகளை அறியாமல்;• இவ்வூர் = இந்த ஊரார் அவளை நான் எளிதில் அடைந்துவிட்டதாக எண்ணி,• எமக்கு அலர் ஈந்தது = எங்கள் காதலைப் பற்றி அலர் பேசி எங்களுக்குப் பெரிய நன்மையையே செய்துவிட்டது!

மு.வரதராசன்

மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது. (அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக்கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.)

சாலமன் பாப்பையா

மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.

Meaning in English

The village hath to us this rumour giv'n, that makes her mine; Unweeting all the rareness of the maid with flower-like eyne

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout