Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1141

இன்பத்துப்பால்களவியல்115. அலரறிவுறுத்தல்

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால்.

alarezha Aruyir niRkum atanaippalaraRiyAr pAkkiyat tAl

Rahul Veda

பொருள் / உரை

முருகா எளிய உரை

எங்கள் காதலைப் பற்றி ஊரார் அலர் தூற்றிப் பேசுவதால்தான், என் காதலியை இன்னும் முறைப்படி அடையாத என் அரிய உயிர் போகாமல் நிலைத்து நிற்கிறது; அலர் தூற்றும் அந்த ஊர்மக்கள் இதனை அறியாமல் இருப்பது என் நல்வினைப் பயனாகும்!

• அலர் எழ = எங்கள் காதலைப் பற்றி ஊரார் பழித்து அலர் பேசுவதால்தான்,• ஆர் உயிர் நிற்கும் = என் காதலியை இன்னும் அடையாத என் அருமையான உயிர் போகாமல் நிலைத்து நிற்கிறது;• அதனைப் பாக்கியத்தால் = என் நல்வினைப் பயனால்,• பலர் அறியார் = அலர் தூற்றும் ஊர் மக்கள் பலரும் இதனை அறிந்து கொள்ளவில்லை!

மு.வரதராசன்

(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

பரிமேலழகர்

(அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகனைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவன் சொல்லியது.) அலர் எழ ஆர் உயிர் நிற்கும்-மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண் அலராயெழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய உயிர் பெற்றதுபோன்று நிலைபெறும்; அதனைப் பாக்கியத்தால் பலர்அறியார் - அந்நிலை பேற்றைத் தெய்வத்தால் யானே அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார். (அல்ல குறிப்பட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தமெல்லாம் தோன்ற, 'அரிய உயிர்' என்றும்,அங்ஙனம் அரியாளை எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப் பற்றுக்கோடாக நின்றது என்பான், 'அலர் எழ ஆருயிர் நிற்கும்' என்றும், 'பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின் தூற்றாது ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம், ஆகலான், அவரறியா தொழிகின்றது தெய்வத்தான்,' என்றும் கூறினான். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.

சாலமன் பாப்பையா

ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.

Meaning in English

By this same rumour's rise, my precious life stands fast; Good fortune grant the many know this not

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout