மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்றபடல்ஒல்லா பேதைக்கென் கண்.
maTalUrtal yAmattum uLLuvEn manRapaTalollA pEtaikken kaN
VY THA RA MOORTHI வை தா ர மூர்த்தி
பொருள் / உரை
முருகா எளிய உரை
என் காதலியை நினைத்து என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதே இல்லை; ஆதலால், உலகமே உறங்கும் நள்ளிரவு வேளையிலும் கூட, என் மனம் மடலூர்தலை மேற்கொள்வதைப் பற்றியே உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது!
• பேதைக்கு என் கண் படல் ஒல்லா = அறியாமை குணம் கொண்ட என் காதலியை நினைத்து என் கண்கள் ஒருபோதும் தூக்கத்தை அடைவதில்லை;• யாமத்தும் மன்ற = அதனால் எல்லாரும் உறங்கும் நள்ளிரவிலும் கூட,• மடலூர்தல் உள்ளுவேன் = மடலூர்தல் பற்றியே என் நெஞ்சம் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது!
மு.வரதராசன்
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
பரிமேலழகர்
('மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலைப் பொருந்தா; யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன். ('பேதை' என்றது பருவம் பற்றி அன்று, மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.
Meaning in English
Of climbing 'horse of palm' in midnight hour, I think; My eyes know no repose for that same simple maid





