Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1133

இன்பத்துப்பால்களவியல்114. நாணுத்துறவுரைத்தல்

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்காமுற்றார் ஏறும் மடல்.

nANoTu nallANmai paNTuTaiyEn inRuTaiyEnkAmuRRAr ERum maTal

Karpagam

பொருள் / உரை

முருகா எளிய உரை

தவறானதைச் செய்யத் தயங்கும் நாணத்தையும் எதற்கும் அஞ்சாத ஆண்மையையும் நான் முன்பு பெற்றிருந்தேன்; ஆனால் காதல் நோய் மிகுந்துவிட்டதால் இன்று அவை மறைந்துவிட, காதலர்கள் ஏறும் மடலையே நான் துணையாகப் பற்றியுள்ளேன்!

• நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் = இழிவானதைச் செய்யத் தயங்கும் நாணத்தையும், எதற்கும் தளராத ஆண்மைத் தகைமையையும் நான் முன்பு பெற்றிருந்தேன்;• இன்று உடையேன் = ஆனால் காதலின் மிகுதியால் அவையெல்லாம் நீங்கிவிட்டதால், இன்று;• காமுற்றார் ஏறும் மடல் = காம நோயால் வருந்துவோர் ஏறும் மடலையே நான் துணையாகப் பெற்றுள்ளேன்.

மு.வரதராசன்

நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

பரிமேலழகர்

('நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது.) நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் - அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன். (நாண்: இழிவாயின செய்தற்கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன: இன்று உள்ளது இதுவேயாகலின் கடிதின் முடியும்', என்பதாம்.)

சாலமன் பாப்பையா

நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.

Meaning in English

I once retained reserve and seemly manliness; To-day I nought possess but lovers' 'horse of palm'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout