Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1132

இன்பத்துப்பால்களவியல்114. நாணுத்துறவுரைத்தல்

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்நாணினை நீக்கி நிறுத்து.

nOnA uTampum uyirum maTalERumnANinai nIkki niRuttu

Kurale Kavithaiyai

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதலியின் பிரிவைத் தாங்க முடியாத என் உடலும் உயிரும், தம்மைத் தடுத்து நிறுத்தும் வெட்கத்தை ஒருபுறமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஊரறிய மடலூர்ந்து காதலை வெளிப்படுத்தத் துணிந்துவிட்டன!

• நோனா உடம்பும் உயிரும் = காதலின் பிரிவைத் தாங்க முடியாத என் உடலும் உயிரும்;• நாணினை நீக்கி நிறுத்து = தன்னைத் தடுக்கும் வெட்கத்தை (நாணத்தை) ஒருபுறமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு,• மடல் ஏறும் = ஊரறிய மடலேறித் தன் காதலை வெளிப்படுத்தத் துணிகின்றன!

மு.வரதராசன்

(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.

பரிமேலழகர்

('நாணுடைய நுமக்கு அது முடியாது', என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன; நாணினை நீக்கி நிறுத்து - அதனை விலக்குவதாய நாணினை அகற்றி. ('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகுபெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற்குறை நேர்தல் நோக்கி.)

சாலமன் பாப்பையா

காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.

Meaning in English

My body and my soul, that can no more endure, Will lay reserve aside, and mount the 'horse of palm'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout