Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1131

இன்பத்துப்பால்களவியல்114. நாணுத்துறவுரைத்தல்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்மடலல்லது இல்லை வலி.

kAmam uzhantu varuntinArk kEmamaTalalla tillai vali

VY THA RA MOORTHI வை தா ர மூர்த்தி

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதலின் பிரிவாற்றாமையால் துன்புற்று வருந்துகின்ற காதலர்களுக்கு, அந்தத் துயரத்தைப் போக்கிக் காதலை வெளிப்படுத்தும் மடலூர்தலைத் தவிர, வேறு எந்தப் பெரிய வலிமையான துணையும் இல்லை!

• காமம் உழந்து வருந்தினார்க்கு = காதலின் பிரிவாற்றாமையால் அல்லலுற்று வருந்துகின்ற காதலர்களுக்கு;• ஏமம் மடல் அல்லது = துன்பத்தைப் போக்கித் துணை நிற்கும் மடலூர்வதைத் தவிர,• வலி இல்லை = வேறு எந்தப் பெரிய வலிமையான உதவியும் இல்லை.

மு.வரதராசன்

காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

பரிமேலழகர்

(சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.) காமம் உழந்து வருந்தினார்க்கு - அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி இல்லை - பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு வலியாவதில்லை. (ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். 'பண்டும் ஆடவராயினார் இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான், இது பொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான், இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்', என்பது கருத்து.)

சாலமன் பாப்பையா

காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.

Meaning in English

To those who 've proved love's joy, and now afflicted mourn, Except the helpful 'horse of palm', no other strength remains

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout