Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1130

இன்பத்துப்பால்களவியல்113. காதற்சிறப்புரைத்தல்

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்ஏதிலர் என்னும்இவ் வூர்.

uvantuRaivar uLLattuL enRum ikantuRaivarEtilar ennumiv vUr

Roshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் காதலர் எப்போதுமே என் உள்ளத்திற்குள்ளேயே மகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்; ஆனால் இதனை அறியாத இந்த ஊர்மக்கள், 'அவர் இவளைப் பிரிந்து தொலைவில் வாழ்கிறார், அன்பில்லாதவர்' என்று வீணாகப் பழிக்கின்றனர்!

• என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் = என் காதலர் எப்போதும் என் உள்ளத்திற்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்;• இவ்வூர் = ஆனால் இந்த ஊரார் அதனை அறியாமல்,• இகந்து உறைவர் = 'அவர் இவளைப் பிரிந்து எங்கோ வாழ்கிறார்,• ஏதிலர் என்னும் = இவள் மீது அன்பில்லாதவர்' என்று வீணாகப் பழித்துப் பேசுகின்றனர்.

மு.வரதராசன்

காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்; இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர் - அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். ('உவந்து உறைவர்' என்றதனால் அன்புடைமை கூறினாள். 'பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.

Meaning in English

Rejoicing in my very soul he ever lies; 'Her love estranged is gone far off!' the village cries

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout