இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கேஏதிலர் என்னும்இவ் வூர்.
imaippiR karappAk kaRival anaittiRkEEtilar ennumiv vUr
Priya Prakash
பொருள் / உரை
முருகா எளிய உரை
கண் இமைத்தால் கண்ணுக்குள் இருக்கும் காதலர் பார்வைக்கு மறைந்து விடுவார் என்று அறிந்து நான் இமைக்காமல் விழித்திருக்கிறேன்; ஆனால் என் நிலை புரியாத இந்த ஊரார், 'தூங்க விடாமல் துன்பம் தரும் அன்பில்லாதவர்' என்று என் காதலரைப் பழிக்கின்றனர்!
• இமைப்பின் கரப்பாக்கு அறிவல் = கண்ணை இமைத்தால் உள்ளிருக்கும் காதலர் பார்வைக்கு மறைவார் என்பதை அறிந்து இமைக்காமல் விழித்திருக்கிறேன்;• அனைத்திற்கே = இந்தத் தூக்கமின்மையைக் கண்டு,• இவ்வூர் = இந்த ஊரார் என் உள்ளம் அறியாமல்,• ஏதிலர் என்னும் = என்னைத் தூங்கவிடாமல் பிரிந்து துன்புறுத்தும் அன்பில்லாதவர் என்று அவரைக் குறை கூறுகின்றனர்.
மு.வரதராசன்
கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.
பரிமேலழகர்
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) இமைப்பிற் கரப்பார்க்கு அறிவல் - என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்; அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். (தன் கருத்து அறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை வேறுபடுத்து, 'இவ்வூர்' என்றாள். 'ஒரு பொழுதும்' பிரியாதவரைப் பிரிந்தார் என்று பழிக்கற்பாலையல்லை', என்பதாம்.)
சாலமன் பாப்பையா
என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.
Meaning in English
I fear his form to hide, nor close my eyes: 'Her love estranged is gone!' the village cries





