நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்அஞ்சுதும் வேபாக் கறிந்து.
nenjsattAr kAta lavarAka veytuNTalanjsutum vEpAk kaRintu
Jayasree
பொருள் / உரை
முருகா எளிய உரை
என் காதலர் எப்போதும் என் நெஞ்சத்திற்குள்ளேயே வாழ்கிறார்; ஆதலால் சூடான உணவை உண்டால் அந்த வெப்பம் உள்ளே வாழும் என் காதலரைச் சுட்டுவிடுமோ என்று அஞ்சி, சூடாக உண்ணவும் பயப்படுகிறேன்!
• காதலவர் நெஞ்சத்தார் ஆக = என் காதலர் எப்போதும் என் நெஞ்சத்திற்குள்ளேயே குடியிருப்பதால்;• வெய்து உண்டல் = சூடான உணவை உண்ணும் போது,• வேபாக்கு அறிந்து = அந்தச் சூடு உள்ளிருக்கும் என் காதலரைச் சுட்டு வருத்தி விடுமோ என்று பயந்து,• அஞ்சுதும் = சூடான உணவை உண்ணவும் அஞ்சுகிறேன்!
மு.வரதராசன்
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து. ('எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை'? என்பது குறிப்பெச்சம்.)
சாலமன் பாப்பையா
என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.
Meaning in English
Within my heart my lover dwells; from food I turn That smacks of heat, lest he should feel it burn





