Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 113

அறத்துப்பால்இல்லறவியல்12. நடுவு நிலைமை

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே யொழிய விடல்.

nanRE tarinum naTuvikantAm AkkattaianRE yozhiya viTal

B. S. Rohith Hariram

பொருள் / உரை

முருகா எளிய உரை

நமக்கு நன்மையே தருவதாகத் தோன்றினாலும் கூட, நடுவுநிலைமை மற்றும் நேர்மையை விட்டு விலகுவதால் கிடைக்கக்கூடிய எந்தவொரு லாபத்தையும் அப்போதே முற்றிலும் கைவிட்டுவிட வேண்டும்.

• நன்றே தரினும் = தற்காலிக நன்மையையே தருவதாக இருந்தாலும்,• நடுவிகந்து = நடுவுநிலைமை மற்றும் நீதியை விட்டு விலகுவதால்• ஆம் ஆக்கத்தை = உண்டாகும் செல்வத்தை (லாபத்தை),• அன்றே = அந்த நாளிலேயே (அப்போதே)• ஒழிய விடல் = கைவிட்டுத் தூக்கி எறிந்துவிட வேண்டும்.

மு.வரதராசன்

தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

பரிமேலழகர்

நன்றே தரினும் - தீங்கு அன்றி நன்மையே பயந்ததாயினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல் -நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக. (நன்மை பயவாமையின் நன்றே தரினும் என்றார். இகத்தலான் என்பது இகந்து எனத் திரிந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் முறையே நடுவு நிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச்செல்வம் தீமை பயத்தலும் கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.

Meaning in English

Though only good it seem to give, yet gain By wrong acquired, not e'en one day retain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout