Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 112

அறத்துப்பால்இல்லறவியல்12. நடுவு நிலைமை

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப்பு உடைத்து.

seppam uTaiyavan Akkanj sitaivinRiessattiR kEmAp puTaittu

Thirukkural

பொருள் / உரை

முருகா எளிய உரை

நடுவுநிலைமை மற்றும் நேர்மையோடு வாழ்கின்ற ஒருவனுடைய செல்வமானது அழியாமல் நிலைத்து நின்று, அவனுக்குப் பின் அவனது சந்ததியினருக்கும் தலைமுறை தலைமுறையாக உறுதியான பாதுகாப்பாய் அமையும்.

• செப்பம் உடையவன் = நடுவுநிலைமை தவறாத நேர்மையாளனின்• ஆக்கம் = செல்வ வளமானது,• சிதைவின்றி = அழியாமல் நிலைத்து நின்று,• எச்சத்திற்கு = அவனது வழித்தோன்றல்களுக்கும் (சந்ததியினருக்கும்)• ஏமாப்பு உடைத்து = பாதுகாப்பான பெரும் காவலாக அமையும்.

மு.வரதராசன்

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

பரிமேலழகர்

செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. (விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.)

சாலமன் பாப்பையா

நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்

Meaning in English

The just man's wealth unwasting shall endure, And to his race a lasting joy ensure

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout