Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1126

இன்பத்துப்பால்களவியல்113. காதற்சிறப்புரைத்தல்

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவராநுண்ணியர்எம் காத லவர்.

kaNNuLLiR pOkAr imaippiR paruvarArnuNNiyarem kAta lavar

Srilekha Parthasarathy

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் அன்புக் காதலர் எப்போதும் என் கண்களை விட்டு எங்கும் போகாமல் கண்ணுக்குள்ளேயே வாழ்கிறார்; நான் கண் இமைத்தாலும் கூட அவர் நெரிசலில் வருந்துவதில்லை; அவ்வளவு நுட்பமான அருவ வடிவில் அவர் என் கண்களுக்குள் நிறைந்திருக்கிறார்!

• எம் காதலவர் = என் அன்புக் காதலர்;• கண்ணுள்ளின் போகார் = எப்போதும் என் கண்களை விட்டு எங்கும் அகன்று போக மாட்டார்;• இமைப்பின் பருவரார் = நான் அறியாமல் கண்ணை இமைத்தாலும் அதனால் அவர் துன்பப்பட மாட்டார்;• நுண்ணியர் = அவர் அவ்வளவு நுட்பமான வடிவில் என் கண்ணுக்குள் வாழ்கிறார்!

மு.வரதராசன்

எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

பரிமேலழகர்

(ஒருவழித்தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.) (தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார் கருதுக,) எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய காதலர் எம் கண்ணகத்து நின்றும் போகார்; இமைப்பின் பருவரார் - யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால் வருந்துவதும் செய்யார்; நுண்ணியர் - ஆகலான் காணப்படா நுண்ணியர். (இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின் 'கண்ணுள்ளின் போகார்' என்றும், இமைத்துழியும் அது நிற்றலான் 'இமைப்பின் பருவரார்' என்றும் கூறினாள்.)

சாலமன் பாப்பையா

என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர்.

Meaning in English

My loved one's subtle form departs not from my eyes; I wink them not, lest I should pain him where he lies

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout