வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்அதற்கன்னள் நீங்கும் இடத்து.
vAzhtal uyirkkannaL Ayizhai sAtalataRkannaL nIngkum iTattu
Rajaganapathy
பொருள் / உரை
முருகா எளிய உரை
அழகிய நகைகளை அணிந்த என் காதலி, என்னைத் தழுவிக் கூடும் போது உடலோடு உயிர் இணைந்து வாழும் வாழ்வைப் போன்றவள்; என்னை விட்டுப் பிரியும் போதோ, உடலை விட்டு உயிர் பிரியும் சாவைப் போன்ற துயரத்தைத் தருபவளாவாள்!
• ஆயிழை = சிறந்த அழகிய அணிகலன்களை அணிந்த இவள்,• உயிர்க்கு வாழ்தல் அன்னள் = என்னைத் தழுவிக் கூடும் போது என் உடலோடு உயிர் இணைந்து இன்பமாக வாழ்வதைப் போன்றவள்;• நீங்கும் இடத்து = என்னை விட்டுப் பிரியும் போதோ,• அதற்குச் சாதல் அன்னள் = அந்த உடலை விட்டு உயிர் பிரிந்து போகும் சாவைப் போன்ற துயரத்தைத் தருகிறாள்!
மு.வரதராசன்
ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.
பரிமேலழகர்
(பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது.) ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும், நீங்குமிடத்து அதற்குச் சாதல் அன்னள் - பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்; ('எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன. வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும் அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.)
சாலமன் பாப்பையா
என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்.
Meaning in English
Life is she to my very soul when she draws nigh; Dissevered from the maid with jewels rare, I die





