அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போலமறுவுண்டோ மாதர் முகத்து.
aRuvAy niRainta avirmatikkup pOlamaRuvuNTO mAtar mukattu
Sirpy
பொருள் / உரை
முருகா எளிய உரை
தேய்ந்து தேய்ந்து மீண்டும் வளர்ந்து ஒளிரும் சந்திரனிடத்தில் இருப்பது போல, களங்கமே இல்லாத என் அழகிய காதலியின் முகத்தில் ஏதேனும் ஒரு சிறிய மறுதான் உண்டோ?
• அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப் போல = தேய்ந்து குறைந்து மீண்டும் படிப்படியாக வளர்ந்து ஒளிரும் நிலவில் உள்ள களங்கத்தைப் போல;• மாதர் முகத்து = என் அழகிய காதலியின் ஒளிவீசும் முகத்தில்,• மறு உண்டோ = ஏதேனும் ஒரு சிறிய களங்கம் தான் உண்டோ? (இல்லையே!).
மு.வரதராசன்
குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.
பரிமேலழகர்
(இதுவும் அது.) (அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது?) அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல - முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு உண்டோ? (இடம் - கலை, மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.)
சாலமன் பாப்பையா
நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?
Meaning in English
In moon, that waxing waning shines, as sports appear, Are any spots discerned in face of maiden here





