Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1116

இன்பத்துப்பால்களவியல்112. நலம்புனைந்துரைத்தல்

மதியும் மடந்தை முகனும் அறியாபதியின் கலங்கிய மீன்.

matiyum maTantai mukanum aRiyApatiyin kalangkiya mIn

C. Sathya

பொருள் / உரை

முருகா எளிய உரை

வானில் உள்ள விண்மீன்கள், முழு நிலவு எது, என் காதலியின் முகம் எது என்று பிரித்தறிய முடியாமல் திகைத்து, வானத்தில் தாம் இருக்கும் இடத்தை விட்டு அங்கும் இங்கும் கலங்கித் திரிகின்றன!

• மீன் = வானத்தில் உள்ள விண்மீன்கள்;• மதியும் மடந்தை முகனும் அறியா = முழுநிலவு எது, என் காதலியின் முகம் எது என்று இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைப் பிரித்தறிய முடியாமல்;• பதியின் கலங்கிய = தாம் இருக்கும் நிலையான இடத்திலிருந்து நிலைதவறிக் கலங்கித் திரிகின்றன!

மு.வரதராசன்

விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

பரிமேலழகர்

(இரவுக்குறிக்கண் மதி கண்டு சொல்லியது.) மீன் - வானத்து மீன்கள்; மதியும் மடந்தை முகனும் அறியா - வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம்மடந்தை முகத்தினையும் இதுமதி, இதுமுகம் என்று அறியமாட்டாது; பதியின் கலங்கிய - தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன. (ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல் பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு, வருகின்ற பாட்டால் பெறப்படும். இனி 'இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின மீன்கள் அறியா' என்றுரைப்பினும் அமையும்.)

சாலமன் பாப்பையா

அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!

Meaning in English

The stars perplexed are rushing wildly from their spheres; For like another moon this maiden's face appears

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout