Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1108

இன்பத்துப்பால்களவியல்111. புணர்ச்சிமகிழ்தல்

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு.

vIzhum iruvark kinitE vaLiyiTaipOzhap paTAa muyakku

Piraveenan Kirupakaran

பொருள் / உரை

முருகா எளிய உரை

காற்று கூட நடுவே புகுந்து பிரிக்க முடியாதபடி இறுகத் தழுவிக்கொள்ளும் தழுவலானது, ஒருவரையொருவர் உயிரென நேசிக்கும் காதலர்கள் இருவருக்குமே எல்லையற்ற பேரன்பின் இன்பத்தைத் தருவதாகும்.

• வளி இடை போழப்படா முயக்கு = காற்று கூட நடுவே நுழைய முடியாதபடி இறுகத் தழுவும் உடலொன்றிய தழுவலானது;• வீழும் இருவர்க்கு இனிதே = ஒருவரையொருவர் உயிராக நேசிக்கும் காதலர்கள் இருவருக்குமே எல்லையற்ற இன்பத்தைத் தருவதாகும்.

மு.வரதராசன்

காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.

பரிமேலழகர்

(ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்ற தொக்கும்) வளி இடை போழப்படா முயக்கு - ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்; வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே. (முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. 'ஈண்டு இருவர் இல்லை இன்மையான், இஃது ஒவ்வாது' என்பது கருத்து. களவிற்புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு உடன்படான் கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.

Meaning in English

Sweet is the strict embrace of those whom fond affection binds, Where no dissevering breath of discord entrance finds

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout