Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1106

இன்பத்துப்பால்களவியல்111. புணர்ச்சிமகிழ்தல்

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்குஅமிழ்தின் இயன்றன தோள்.

uRutO RuyirtaLirppat tINTalAR pEtaikkamizhtin iyanRana tOL

Anand Aravindakshan

பொருள் / உரை

முருகா எளிய உரை

தழுவும் போதெல்லாம் வாடி நின்ற என் உயிர் புத்துயிர் பெற்றுத் தழைத்து மலரும் வண்ணம் என்னைத் தீண்டுவதால், இந்த இளமங்கையின் மெல்லிய தோள்கள் அமிழ்தத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்!

• உறுதோறு = தழுவும் போதெல்லாம்,• உயிர் தளிர்ப்ப = வாடி நின்ற என் உயிர் மீண்டும் புதுவாழ்வு பெற்றுத் தளிர்க்கும் வண்ணம்,• தீண்டலால் = என்னைத் தொட்டுத் தழுவுவதால்;• பேதைக்குத் தோள் = இந்த இளம் பெண்ணின் மெல்லிய தோள்கள்,• அமிழ்தின் இயன்றன = சாகா வரம் தரும் அமிழ்தத்தினாலேயே செய்யப்பட்டன போலும்!

மு.வரதராசன்

பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால்- தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன. (ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று. வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான். தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.)

சாலமன் பாப்பையா

இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.

Meaning in English

Ambrosia are the simple maiden's arms; when I attain Their touch, my withered life puts forth its buds again

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout