வேட்ட பொழுதின் அவையவை போலுமேதோட் டார் கதுப்பினாள் தோள்.
vETTa pozhutin avaiyavai pOlumEtOTTAr katuppinAL tOL
Adithya RK
பொருள் / உரை
முருகா எளிய உரை
நறுமணம் கமழும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய இவளது தோள்கள், நாம் விரும்பிய பொருள்கள் விரும்பிய போதெல்லாம் நேரில் வந்து தரும் இன்பத்தைப் போல, எப்போது தழுவினாலும் புதுப்புதுப் பேரன்பை அள்ளித் தருகின்றன.
• தோட்டார்ப் பூங்கதுப்பினாள் தோள் = மலர் மாலைகளை அணிந்த அழகிய கூந்தலையுடைய இவளது தோள்கள்;• வேட்ட பொழுதின் = நாம் மிகவும் ஆசைப்பட்டு விரும்பிய பொழுதெல்லாம்,• அவையவை போலுமே = அந்தந்தப் பொருள்களே நேரில் வந்து தரும் இன்பத்தைப் போல எப்போது தழுவினாலும் சலிக்காத பேரன்பை அள்ளித் தருகின்றன.
மு.வரதராசன்
மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.
பரிமேலழகர்
தோழியிற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது) வேட்ட பொழுதின் அவையவை போலுமே - மிக இனியவாய பொருள்களைப் பெறாது அவற்றின்மேல் விருப்பங்கூர்ந்த பொழுதின்கண் அவையவை தாமே வந்து இன்பஞ்செய்யுமாறு போல இன்பஞ் செய்யும்; தோட்டார் கதுப்பினாள் தோள் - எப்பொழுதும் பெற்றுப் புணரினும், பூவினை அணிந்த தழைத்த கூந்தலின் யுடையாள் தோள்கள்.(தோடு: ஆகுபெயர். இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு,பாங்கற்கூட்டத்துக்கண் முன்னரே நிகழ்ந்திருக்க, பின்னரும் புதியவாய் நெஞ்சம் பிணித்தலின், அவ்வாராமை பற்றி இவ்வாறு கூறினான். தொழிலுவமம்.)
சாலமன் பாப்பையா
நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.
Meaning in English
In her embrace, whose locks with flowery wreaths are bound, Each varied form of joy the soul can wish is found





