Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1104

இன்பத்துப்பால்களவியல்111. புணர்ச்சிமகிழ்தல்

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்தீயாண்டுப் பெற்றாள் இவள்.

nIngkin teRUum kuRukungkAl taNNennumtIyANTup peRRAL ivaL

Abrahaam Nithya Pandian

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• நீங்கின் தெறூஉம் = தன்னை விட்டுப் பிரிந்து சென்றால் சுட்டெரிக்கும்,• குறுகுங்கால் தண்ணென்னும் = தன்னை நெருங்கித் தழுவும் போதோ குளுமையை அள்ளித் தரும்;• தீ = இத்தகைய ஒரு விசித்திரமான காதல் தீயை;• இவள் யாண்டுப் பெற்றாள் = இந்த மங்கை எங்கிருந்து பெற்று வந்தாளோ?எளிய விளக்கம்:தன்னை விட்டுப் பிரிந்தால் சுட்டெரிப்பதும், தன்னை நெருங்கித் தழுவும் போதோ உடலையும் உள்ளத்தையும் குளிரச் செய்வதுமான இந்த விசித்திரமான காதல் தீயை, இந்த மங்கை எங்கிருந்து பெற்று வந்தாளோ?

மு.வரதராசன்

நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

பரிமேலழகர்

(பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது.) நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ - தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை; இவள் யாண்டுப் பெற்றாள் - என்கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள். (கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால் தண் என்னும்' என்றும், இப்பெற்றியதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்.)

சாலமன் பாப்பையா

தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?

Meaning in English

Withdraw, it burns; approach, it soothes the pain; Whence did the maid this wondrous fire obtain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout