Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1103

இன்பத்துப்பால்களவியல்111. புணர்ச்சிமகிழ்தல்

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு.

tAmvIzhvAr menROL tuyilin initukoltAmaraik kaNNAn ulaku

Srinivas

பொருள் / உரை

முருகா எளிய உரை

தாம் மனம் விரும்பி நேசிக்கும் அன்புக் காதலியின் மெல்லிய தோள்களைத் தழுவித் துயிலும் இன்ப உறக்கத்தை விட, தாமரைக் கண்ணனான இறைவனின் சொர்க்க உலகம் அத்தனை இனிமை வாய்ந்ததாக இருந்துவிட முடியுமோ?

• தாம் வீழ்வார் = தாம் மனம் விரும்பி நேசிக்கும் காதலியின்,• மென்தோள் துயிலின் = மென்மையான தோள்களைத் தழுவித் தூங்கும் இன்ப உறக்கத்தை விட;• தாமரைக் கண்ணான் உலகு = தாமரைக் கண்ணனாகிய திருமாலின் சொர்க்க உலகம்,• இனிது கொல் = அத்தனை இனிமை உடையதாக இருந்துவிட முடியுமோ?

மு.வரதராசன்

தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ.

பரிமேலழகர்

(நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது என்ற பாங்கற்குத் தலைவன் சொல்லியது.) தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம். (ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப்பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிதுகொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.)

சாலமன் பாப்பையா

தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?

Meaning in English

Than rest in her soft arms to whom the soul is giv'n, Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout