Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1101

இன்பத்துப்பால்களவியல்111. புணர்ச்சிமகிழ்தல்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள.

kaNTukET TuNTuyirt tuRRaRiyum aimpulanumoNtoTi kaNNE uLa

Suganeshwaran

பொருள் / உரை

முருகா எளிய உரை

கண்ணால் பார்த்தல், காதால் கேட்டல், நாவால் சுவைத்தல், மூக்கால் நுகர்தல், மெய்யால் தீண்டுதல் ஆகிய ஐம்பொறிகளாலும் நுகரப்படும் அனைத்து வகை இன்பங்களும், ஒளிவீசும் வளையல்களை அணிந்த இந்த ஒருத்தியிடத்திலேயே ஒருங்கே முழுமையாக நிறைந்துள்ளன.

• கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் = கண்ணால் பார்த்தும், காதால் கேட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் நுகர்ந்தும், உடலால் தொட்டும் உணரப்படும்;• ஐம்புலனும் = ஐந்து புலன்களின் இன்பங்களும்;• ஒள்தொடி கண்ணே உள = ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த இந்த ஒருத்தியிடத்திலேயே ஒருங்கே நிறைந்துள்ளன.

மு.வரதராசன்

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

பரிமேலழகர்

(இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் -கண்ணால் கண்டும் செவியால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும்; ஒண்டொடி கண்ணே உள - இவ்வொள்ளிய தொடியை உடையாள் கண்ணே உளவாயின. (உம்மை, முற்று உம்மை, தேற்றேகாரம்: வேறிடத்து இன்மை விளக்கி நின்றது.வேறுவேறு காலங்களில் வேறு வேறு பொருள்களான் அனுபவிக்கப்படுவன ஒரு காலத்து இவள் கண்ணே அனுபவிக்கப்பட்டன என்பதாம். வடநூலார் இடக்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டு அடக்கிக் கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு.

Meaning in English

All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give, In this resplendent armlets-bearing damsel live

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout