Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1100

இன்பத்துப்பால்களவியல்110. குறிப்பறிதல்

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்என்ன பயனும் இல.

kaNNoTu kaNiNai nOkkokkin vAyssoRkaLenna payanum ila

R. K. Sundar

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதலர்களின் கண்களோடு கண்கள் நேருக்கு நேர் கலந்து காதல் பார்வையில் ஒன்றிணைந்து விட்டால், அதன் பிறகு வாயினால் பேசப்படும் வார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை; கண்களின் பார்வைகளே எல்லாவற்றையும் பேசிவிடும்.

• கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் = காதலரின் கண்களோடு கண்கள் ஒன்றோடொன்று கலந்து காதல் பார்வையில் ஒருமித்துவிட்டால்;• வாய்ச் சொற்கள் = வாயினால் பேசப்படும் வார்த்தைகளால்,• என்ன பயனும் இல = வேறு எந்தப் பயனும் இல்லை (பார்வைகளே எல்லாவற்றையும் பேசிவிடும்).

மு.வரதராசன்

கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

பரிமேலழகர்

(இதுவும் அது) கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் - காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்; வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல. (நோக்கால் ஒத்தல்: காதல் நோக்கினவாதல். வாய்ச் சொற்கள்: மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல் மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில் சொற்களாகலின்,இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமித்தம்.)

சாலமன் பாப்பையா

காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.

Meaning in English

When eye to answering eye reveals the tale of love, All words that lips can say must useless prove

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout