Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1099

இன்பத்துப்பால்களவியல்110. குறிப்பறிதல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்காதலார் கண்ணே உள.

EtilAr pOlap potunOkku nOkkutalkAtalAr kaNNE uLa

Abhishek

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஊரார் முன்னிலையில் பிறர் அறியாதவாறு அந்நியரைப் போலப் பாசாங்கு செய்து பொதுவாகப் பார்த்துக் கொள்ளும் கள்ளத்தனம், உள்ளத்தில் மாறாத காதல் கொண்டவர்களின் கண்களில் மட்டுமே காணப்படும் இயல்பாகும்.

• ஏதிலார் போல = முன்பின் அறியாத அந்நியரைப் போலப் பாசாங்கு செய்து,• பொது நோக்கு நோக்குதல் = பலர் கூடியிருக்கும் சபையில் பொதுவாகப் பார்த்துக் கொள்ளும் தன்மை;• காதலார் கண்ணே உள = நெஞ்சாரக் காதல் கொண்டவர்களின் கண்களில் மட்டுமே இயல்பாக இருக்கும்.

மு.வரதராசன்

புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

பரிமேலழகர்

(தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது) ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்; காதலார் கண்ணே உள - இக்காதலையுடையர் கண்ணே உளவாகாநின்றன. (பொது நோக்கு : யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய நோக்குதல் தொழில் ஒன்றேயாயினும், இருவர்கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கண்தானும் குறிப்பு வேறுபாட்டால் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் 'மது மறைந்துண்டார் மகிழ்ச்சிபோல உள்ளத்துள்ளே மகிழ்தலின்' (இறையனார்-8) அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார் போல' என்றும் கூறினாள்.)

சாலமன் பாப்பையா

முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

Meaning in English

The look indifferent, that would its love disguise, Is only read aright by lovers' eyes

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout