எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.
ennanRi konRArkkum uyvuNTAm uyvillaiseynnanRi konRa makaRku
Kaatu Poochi Brothers
பொருள் / உரை
முருகா எளிய உரை
பெரும் அறம் அழித்தார்க்கும் உய்வுண்டாமே!அதற்கே தப்பிடும் வழியும் உண்டாமே!செய்ந்நன்றி கொன்ற துரோகிக்கு இல்லையே!அவனுக்குத் தப்பும் வழியே இல்லையே!
• எந்நன்றி கொன்றார்க்கும் = எந்தப் பெரிய அறங்களை அழித்தவர்க்கும்• உய்வுண்டாம் = பாவத்திலிருந்து தப்பிப் பிழைக்க வழிகள் உண்டு;• செய்ந்நன்றி கொன்ற மகற்கு = ஒருவர் செய்த உதவியை மறந்து துரோகம் செய்தவனுக்கு• உய்வில்லை = தப்பிப் பிழைக்க வழியே இல்லை.
மு.வரதராசன்
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
பரிமேலழகர்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை. (பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தப்புதலும் (புறநா.34) முதலிய பாதகங்களைச் செய்தல். இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை
Meaning in English
Who every good have killed, may yet destruction flee; Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free





