Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 109

அறத்துப்பால்இல்லறவியல்11. செய்ந்நன்றி அறிதல்

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும்.

konRanna innA seyinum avarseytaonRunan RuLLak keTum

SPR Prime Media

பொருள் / உரை

முருகா எளிய உரை

கொல்வது போன்ற துன்பத்தைச் செய்தாலுமே!முன்பு உதவியவரே ஆனாலுமே!முன்னொரு நன்மை நினைந்தாலே கெடுமே!அக்கொடிய தீமை முழுதும் கெடுமே!

• கொன்றன்ன = கொல்வது போன்ற• இன்னா செயினும் = கொடிய பெருந்துன்பத்தைச் செய்தாலும்,• அவர் செய்த = அவர் முன்பு செய்த• ஒன்று நன்று = ஒரே ஒரு நன்மையை• உள்ள = நினைத்துப் பார்த்த அளவில்• கெடும் = அக்கொடிய தீமை யாவும் மனதிலிருந்து மறைந்து அழியும்.

மு.வரதராசன்

முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

பரிமேலழகர்

கொன்று அன்ன இன்னா செயினும் - தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும் - அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம். (தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.

Meaning in English

Effaced straightway is deadliest injury, By thought of one kind act in days gone by

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout