Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 108

அறத்துப்பால்இல்லறவியல்11. செய்ந்நன்றி அறிதல்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.

nanRi maRappatu nanRanRu nanRallatuanRE maRappatu nanRu

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவர் நன்மை மறப்பது நன்றன்றே!அறநெறிக்கு அஃது என்றும் நன்றன்றே!தீங்கையை அன்றே மறத்தல் நன்றாகுமே!அதுவே மிகச் சிறந்த நன்றாகுமே!

• நன்றி மறப்பது = ஒருவர் செய்த நன்மையை மறப்பது• நன்றன்று = அறநெறி (நல்லது) ஆகாது;• நன்றல்லது = அவர் செய்த தீமையை• அன்றே மறப்பது = செய்த அன்றே மறந்துவிடுவது• நன்று = மிகச் சிறந்த நன்மையாகும்.

மு.வரதராசன்

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

பரிமேலழகர்

நன்றி மறப்பது நன்று அன்று -ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன். (இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்

Meaning in English

'Tis never good to let the thought of good things done thee pass away; Of things not good, 'tis good to rid thy memory that very day

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout