Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1097

இன்பத்துப்பால்களவியல்110. குறிப்பறிதல்

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

seRAas siRusollum seRRArpOl nOkkumuRAarpOn RuRRAr kuRippu

Saisharan

பொருள் / உரை

முருகா எளிய உரை

உள்ளத்தில் கோபம் இல்லாத போலிச் சினப் பேச்சும், பகைவரைப் போலப் பார்க்கும் கடுமையான பார்வையும், வெளியே அந்நியர் போல நடித்தாலும் உள்ளத்தால் காதலில் கட்டுண்டவர்கள் வெளிப்படுத்தும் காதலின் அடையாளங்களாகும்.

• செறாஅச் சிறு சொல்லும் = மனத்தில் கோபம் இல்லாத போலிச் சினச் சொற்களும்,• செற்றார் போல் நோக்கும் = பகைவரைப் போலப் பார்க்கும் கண்டிப்பான பார்வையும்;• உறாஅர்போன்று = வெளியே அந்நியரைப் போல நடித்தாலும்,• உற்றார் குறிப்பு = உள்ளத்தில் காதலால் கட்டுண்டவர்களின் உண்மையான காதலின் அடையாளங்களாகும்.

மு.வரதராசன்

பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) செறாஅச் சிறு சொல்லும் - பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும்; செற்றார் போல் நோக்கும் - அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன. (குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம்.)

சாலமன் பாப்பையா

(ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.

Meaning in English

The slighting words that anger feign, while eyes their love reveal Are signs of those that love, but would their love conceal

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout