Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1092

இன்பத்துப்பால்களவியல்110. குறிப்பறிதல்

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்செம்பாகம் அன்று பெரிது.

kaNkaLavu koLLum siRunOkkam kAmattilsempAkam anRu peritu

Harish Raghavendra

பொருள் / உரை

முருகா எளிய உரை

நான் பார்க்காத போது இவளது விழிகள் என்னைக் கள்ளத்தனமாகக் கடைக் கண்ணால் பார்க்கும் அந்தத் திருட்டுப் பார்வை, காதல் இன்பத்தின் சரிபாதி அளவு மட்டுமல்ல, அதைவிடப் பல மடங்கு மேலான பெருமகிழ்ச்சியைத் தருகிறது.

• கண் களவு கொள்ளும் = நான் பாராத போது இவளது கண்கள் என்னைக் கள்ளத்தனமாகப் பார்க்கும்,• சிறு நோக்கம் = அந்தத் திருட்டுப் பார்வை;• காமத்தில் = காதல் இன்பத்தில்,• செம்பாகம் அன்று = சரிபாதி அளவு மட்டுமல்ல,• பெரிது = அதைவிடப் பெரிய அளவிலான எல்லையற்ற மகிழ்ச்சியாகும்.

மு.வரதராசன்

கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் - இவள் கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய நோக்கம்; காமத்தின் செம்பாகம் அன்று பெரிது - மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி அளவன்று; அதனினும் மிகும்.(தான் நோக்கியவழி நாணி இறைஞ்சியும்,நோக்காவழி உற்று நோக்கியும் வருதலான், 'களவுகொள்ளும்' என்றும், அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின், இனிப் 'புணர்தல் ஒருதலை'என்பான் 'செம்பாகம் அன்று, பெரிது' என்றும் கூறினான்.)

சாலமன் பாப்பையா

நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.

Meaning in English

The furtive glance, that gleams one instant bright, Is more than half of love's supreme delight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout