Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1091

இன்பத்துப்பால்களவியல்110. குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்குநோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

irunOk kivaLuNkaN uLLa torunOkkunOynOkkon RannOy maruntu

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

மை தீட்டிய இவளது அழகிய விழிகளில் இரண்டு வகையான பார்வைகள் உள்ளன; ஒரு பார்வை என்னுள் காதல் வேதனையை உண்டாக்கும் பார்வை, மற்றொரு பார்வை அந்த வேதனையைத் தீர்த்து இன்பம் நல்கும் அருமருந்தாகும் பார்வை.

• இவள் உண் கண் உள்ளது = மை தீட்டிய இவளது விழிகளில் எனக்கு இரண்டு வகையான பார்வைகள் உள்ளன;• ஒரு நோக்கு நோய் நோக்கு = அவற்றுள் ஒரு பார்வை எனக்குக் காதல் துன்பத்தை உண்டாக்கும் பார்வையாகும்;• ஒன்று அந்நோய் மருந்து = மற்றொரு பார்வை அந்தத் துன்பத்திற்கு மருந்தாகி இன்பம் தரும் பார்வையாகும்.

மு.வரதராசன்

இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

பரிமேலழகர்

(தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது.) இவள் உண்கண் உள்ளது இரு நோக்கு - இவளுடைய உண்கண் அகத்தாய நோக்கு இது பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று; ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒரு நோக்கு என்கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு. (உண்கண்: மையுண்ட கண். நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தினாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர்,அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக.அவ் வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.)

சாலமன் பாப்பையா

இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.

Meaning in English

A double witchery have glances of her liquid eye; One glance is glance that brings me pain; the other heals again

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout