Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1089

இன்பத்துப்பால்களவியல்109. தகையணங்குறுத்தல்

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்குஅணியெவனோ ஏதில தந்து.

piNaiyEr maTanOkkum nANum uTaiyATkaNiyevanO Etila tantu

Prasanna Adhisesha

பொருள் / உரை

முருகா எளிய உரை

பெண்மானைப் போன்ற மருண்ட பார்வையும், இயல்பான நாணத்தையும் அணிகலன்களாகப் பெற்றுள்ள இந்தப் பேரழகிக்கு, சம்பந்தமே இல்லாத செயற்கை நகைகளை அணிவித்து அழகு பார்ப்பது எதற்காகவோ?

• பிணை ஏர் மடநோக்கும் = பெண்மானைப் போன்ற மருண்ட அழகிய பார்வையும்,• நாணும் = உள்ளத்தில் பெண்ணிற்கே உரிய நாணத்தையும்,• உடையாட்கு = இயற்கையான அணிகலன்களாகப் பெற்றுள்ள இவளுக்கு;• ஏதில தந்து = தொடர்பில்லாத செயற்கையான நகைகளை அணிவித்து,• அணி எவனோ = அழகு செய்வது எதன் பொருட்டோ?

மு.வரதராசன்

பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.

பரிமேலழகர்

(அணிகலத்தானாய வருத்தம் கூறியது.) பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு - புறத்து மான் பிணை ஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்து? (மடநோக்கு - வெருவுதல்உடைய நோக்கு. 'இவட்குப் பாரமாதலும் எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?

Meaning in English

Like tender fawn's her eye; Clothed on is she with modesty; What added beauty can be lent; By alien ornament

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout