கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்படாஅ முலைமேல் துகில்.
kaTAak kaLiRRinmER kaTpaTAm mAtarpaTAa mulaimEl tukil
Shiva Shankar Balasubramanian
பொருள் / உரை
முருகா எளிய உரை
இந்தப் பெண்ணின் வனப்புமிக்க மார்பின் மீது அணிந்துள்ள ஆடையானது, உயிரைப் பறிக்க வரும் மதம் கொண்ட யானையின் மீது போர்த்தப்பட்ட முகப்படாம் போல இருந்து என் உயிரை அச்சுறுத்துகிறது.
• மாதர் = இந்த இளம் பெண்ணின்,• படா முலை மேல் துகில் = தளர்ச்சியடையாத வனப்புமிக்க மார்பகங்களின் மீது அணிந்துள்ள ஆடையானது;• கடாஅக் களிற்றின் மேல் = மதம் பிடித்துக் கொல்வதற்காக வரும் ஆண் யானையின் மத்தகத்தின் மீது இடப்பட்ட,• கட்படாம் = கண்களை மறைக்கும் முகப்படாம் போன்றதாகும்.
மு.வரதராசன்
மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.
பரிமேலழகர்
(அவள் முலைகளினாய வருத்தம் கூறியது.) மாதர் படா முலை மேல் துகில் - இம் மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில்; கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் - அவை கொல்லாமல் காத்தலின் கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும். (கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றான். துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றும் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.)
சாலமன் பாப்பையா
அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.
Meaning in English
As veil o'er angry eyes Of raging elephant that lies, The silken cincture's folds invest This maiden's panting breast





