கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்நோக்கமிம் மூன்றும் உடைத்து.
kURRamO kaNNO piNaiyO maTavaralnOkkamim mUnRum uTaittu
Dr. Sathya Prasad
பொருள் / உரை
முருகா எளிய உரை
இந்த இளம் பெண்ணின் விழிகள் என்னை வருத்துவதால் எமனோ, என் மேல் படர்வதால் சாதாரண கண்களோ, மருண்டு பார்ப்பதால் பெண்மானோ என்று தெரியாமல், இந்த மூன்று தன்மைகளையும் ஒருங்கே கொண்டு மயக்குகின்றன.
• மடவரல் = இந்த இளம் பெண்ணினுடைய,• நோக்கம் = விழிகளின் பார்வை,• கூற்றமோ = உயிரைப் பறித்து வருத்தும் இயல்பால் எமனோ?• கண்ணோ = என் மேல் தாவிப் படர்வதால் சாதாரண விழியோ?• பிணையோ = மருண்டு பார்க்கும் இயல்பால் பெண் மானோ?• இம்மூன்றும் உடைத்து = அறிய முடியவில்லை, இந்த மூன்று தன்மைகளையும் ஒன்றாகக் கொண்டுள்ளது!
மு.வரதராசன்
எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.
பரிமேலழகர்
(இதுவும் அது.) கூற்றமோ - என்னை வருத்துதல் உடைமையான் கூற்றமோ; கண்ணோ - என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ; பிணையோ - இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ? அறிகின்றிலேன்; மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து - இம் மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது.(இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில்பற்றி வந்த ஐயநிலை உவமம்.)
சாலமன் பாப்பையா
என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.
Meaning in English
The light that on me gleams, Is it death's dart? or eye's bright beams? Or fawn's shy glance? All three appear In form of maiden here





