Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1083

இன்பத்துப்பால்களவியல்109. தகையணங்குறுத்தல்

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டு.

paNTaRiyEn kURRen patanai iniyaRintEnpeNTakaiyAl pEramark kaTTu

Arun Prasath

பொருள் / உரை

முருகா எளிய உரை

உயிரைப் பறிக்கும் எமன் என்பவனைப் பற்றி முன்பு கேள்விப்பட்டதுண்டே தவிர நான் நேரில் கண்டதில்லை; இப்போது தெரிந்து கொண்டேன் — அந்த எமன் பெண்மை வடிவத்தோடு வந்து, போர் தொடுக்கும் பெரிய கண்களைக் கொண்டு உயிரை ஈர்க்கிறான் என்று!

• கூற்று என்பதனை = எமன் என்று சொல்லப்படும் உயிரைப் பறிக்கும் தெய்வத்தை,• பண்டு அறியேன் = முன்பு நூல்களில் கேட்டுள்ளேனே தவிர நேரில் கண்டதில்லை;• இனி அறிந்தேன் = இப்போது நேரில் கண்டுகொண்டேன்;• பெண்டகையால் = எமன் என்பவன் பெண்மைக் குணங்களோடு வந்து,• பேர் அமர்க் கட்டு = போர் செய்யும் பெரிய கண்களைக் கொண்டுள்ளான் என்ற உண்மையை.

மு.வரதராசன்

எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது

பரிமேலழகர்

(இதுவும் அது) கூற்று என்பதனைப் பண்டு அறியேன் - கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டு அறிவதல்லது கண்டறியேன்; இனி அறிந்தேன் - இப்பொழுது கண்டறிந்தேன்; பெண் தகையாள் பேர் அமர்க்கட்டு - அது பெண்தகையுடனே பெரியவாய் அமர்த்த கண்களை உடைத்து. (பெண்தகை: நாணம்,மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்கள். அவை அவ்வக்குறிகளான் அறியப்பட்டன. அமர்த்தல்: அமர் செய்தல், பெயரடியாய வினை. பெண்தகையால் இன்பம் பயத்தலும் உண்டேனும் துன்பம் பயத்தல் மிகுதிபற்றிக் கூற்றாக்கிக் கூறினான்.)

சாலமன் பாப்பையா

எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.

Meaning in English

Death's form I formerly Knew not; but now 'tis plain to me; He comes in lovely maiden's guise, With soul-subduing eyes

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout