Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1081

இன்பத்துப்பால்களவியல்109. தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

aNangkukol Aymayil kollO kanangkuzhaimAtarkol mAlumen nenjsu

Haricharan

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதணிகளை அணிந்துள்ள இந்தப் பேரழகி தேவலோகப் பெண்தெய்வமா, அழகிய மயிலா, அல்லது மானிடப் பெண்ணா என்று அறிய முடியாமல் என் மனம் பேரழகில் மயங்கித் திகைக்கின்றது.

• கனங்குழை = கனமான காதணிகளை அணிந்துள்ள இவள்,• அணங்கு கொல் = ஒரு தேவலோகப் பெண்தெய்வமோ?• ஆய் மயில் கொல்லோ = வனப்புமிக்க அழகிய மயிலோ?• மாதர் கொல் = அல்லது மானிடப் பெண்ணோ?• என் நெஞ்சு மாலும் = இவளை இன்னள் என்று முடிவு செய்ய முடியாமல் என் உள்ளம் மயங்குகிறதே!

மு.வரதராசன்

தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.

பரிமேலழகர்

கனங்குழை - இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் - இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல் - அன்றி ஒரு மயில் விசேடமோ? மாதர்கொல் - அன்றி ஒருமானுட மாதரோ; என் நெஞ்சு மாலும் - இவளை இன்னள் என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது. (ஓ - அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்: மயிற் சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். 'கனங்குழை': ஆகுபெயர். 'கணங்குழை' என்ற பாடம் ஓதி, 'பலவாய்த் திரண்ட குழை' என்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றி 'அணங்குகொல்' என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி, 'ஆய்மயில்கொல்' என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி 'மாதர்கொல்' என்றும் கூறினார்.)

சாலமன் பாப்பையா

அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.

Meaning in English

Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear, Is she a maid of human kind? All wildered is my mind

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout