உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்வடுக்காண வற்றாகும் கீழ்.
uTuppatUum uNpatUum kANin piRarmElvaTukkANa vaRRAkum kIzh
Aajeedh Khalid
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிற மனிதர்கள் நல்ல உடைகளை அணிந்து நல்ல உணவை உண்டு வாழ்வதைக் கண்டாலே பொறுக்க முடியாத பொறாமை கொள்ளும் கீழ்மகன், அவர்கள் மீது இல்லாத பழிகளையும் குற்றங்களையும் இட்டுக் கட்டிப் பேசுவதில் வல்லவனாவான்.
• பிறர் = தம்மைச் சுற்றியுள்ள பிற மனிதர்கள்,• உடுப்பதூஉம் = நல்ல ஆடை உடுத்துவதையும்,• உண்பதூஉம் = நல்ல உணவு உண்பதையும்,• கீழ் காணின் = கீழ்மகன் தன் கண்களால் கண்டால்,• பிறர்மேல் = அவர்கள் மீது கடுமையான பொறாமை கொண்டு,• வடுக் காணவற்றாகும் = இல்லாத பழிகளையும் குற்றங்களையும் வலிய உண்டாக்கிப் பேசுவதில் வல்லவனாவான்.
மு.வரதராசன்
கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.
பரிமேலழகர்
உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின் - பிறர் செல்வத்தால் பட்டும் துகிலும் உடுத்தலையும் பாலோடு அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்; பிறர்மேல்வடுக்காண வற்றாகும் - அவற்றைப் பொறாது அவர்மாட்டு வடுவில்லையாகவும் உண்டாக்கவல்லனாம். (உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத்தொழில்மேல் நின்றன, அவற்றால், பூண்டல் ஊர்தல் முதலிய பிற தொழில்களும் கொள்ளப்படும். அவற்றைக் கண்ட துணையானே பொறாமை யெய்தலின் 'காணின்' என்றும், கேட்டார் இது கூடும் என்று இயையப் படைத்தல் அரிது ஆகலின் 'வற்றாகும்' என்றும் கூறினார். இதனால், பிறர் செல்வம் பொறாமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.
Meaning in English
If neighbours clothed and fed he see, the base Is mighty man some hidden fault to trace





