சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்கொல்லப் பயன்படும் கீழ்.
sollap payanpaTuvar sAnROr karumpupOlakollap payanpaTum kIzh
Srihari Sridhar
பொருள் / உரை
முருகா எளிய உரை
உயர்ந்த சான்றோர்கள் எளியவர்கள் தம் துயரத்தைச் சொன்ன மாத்திரத்திலேயே மனம் இரங்கி உதவி செய்வார்கள்; ஆனால் கீழ்மக்களோ, ஆலையில் கரும்பை இட்டு நசுக்கிப் பிழிவதைப் போலத் தண்டனைகளால் நெரித்தால் மட்டுமே பணிந்து பலன் தருவார்கள்.
• சான்றோர் = உயர்ந்த சான்றோர்கள்,• சொல்லப் பயன்படுவர் = எளியவர்கள் தம் குறையைக் கேட்ட மாத்திரத்திலேயே இரங்கி உதவி செய்வார்கள்;• கீழ் = ஆனால் கீழ்மக்களோ,• கரும்பு போல் = ஆலையில் கரும்பை நசுக்கிப் பிழிவதைப் போல,• கொல்லப் பயன்படும் = பலவந்தமாக அடித்துத் துன்புறுத்தினால் மட்டுமே பயன்படுவார்கள்.
மு.வரதராசன்
அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.
பரிமேலழகர்
சொல்லப் பயன்படுவர் சான்றோர் -மெலியர் சென்று தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினார்; கீழ் கரும்புபோல் கொல்லப் பயன்படும் - மறைக் கீழயினார் கரும்பு போல வலியார் நைய நெருக்கிய வழிப் பயன்படுவர். (பயன்படுதல்: உள்ளது கொடுத்தல். கீழாயினாரது இழிவு தோன்ற, மேலாயினாரையும் உடன் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.
Meaning in English
The good to those will profit yield fair words who use; The base, like sugar-cane, will profit those who bruise





