ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்கூன்கையர் அல்லா தவர்க்கு.
Irngkai vitirAr kayavar koTiRuTaikkungkUnkaiyar allA tavarkku
Indira Vijayalakshmi
பொருள் / உரை
முருகா எளிய உரை
கஞ்சத்தனம் நிறைந்த கீழ்மக்கள், தம் தாடையை உடைக்கின்ற முரடர்களுக்குப் பயந்து வாரி வழங்குவார்களே தவிர, எளிய மனிதர்களுக்குத் தாம் உண்டு கை கழுவிய ஈரக் கையைக்கூட உதற மாட்டார்கள்.
• கயவர் = கஞ்சத்தனம் நிறைந்த கயவர்கள்,• கொடிறு உடைக்கும் = தம் தாடை எலும்பை உடைத்து நொறுக்குகின்ற,• கூன்கையர் அல்லாதவர்க்கு = முறுக்கிய கைகளை உடைய முரடர்களுக்கு அன்றி மற்ற எளியவருக்கு,• ஈர்ங்கை விதிரார் = தாம் உண்டு கை கழுவிய ஈரக் கையைக்கூட உதற மாட்டார்கள்.
மு.வரதராசன்
கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.
பரிமேலழகர்
கயவர் கொடிறு உடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு - கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு: ஈர்ங்கை விதிரார் - தாம் உண்டு பூசிய கையைத் தெறித்தல் வேண்டும் என்று இரந்தாலும் தெறியார். (வளைந்த கை - முறுக்கிய கை. 'மெலிவார்க்கு யாதும் கொடார்: நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர்' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.
Meaning in English
From off their moistened hands no clinging grain they shake, Unless to those with clenched fist their jaws who break





