Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1076

பொருட்பால்ஒழிபியல்108. கயமை

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்டமறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

aRaipaRai annar kayavartAm kETTamaRaipiRark kuytturaikka lAn

Mookuthi Murugan

பொருள் / உரை

முருகா எளிய உரை

பிறர் தமக்கு மட்டும் நம்பிக்கையோடு சொன்ன அந்தரங்க ரகசியங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தாமே தேடிச் சென்று ஊர் முழுவதும் பரப்பிவிடுவதால், கீழ்மக்கள் ஓங்கி அடிக்கப்படும் தண்டோரா முரசினைப் போன்றவர்கள் ஆவார்கள்.

• கயவர் = கீழ்மக்கள்,• அறை பறை அன்னர் = ஊர் முழுவதும் ஓங்கி அடிக்கப்படும் முரசினைப் போன்றவர்கள் ஆவார்கள்;• தாம் கேட்ட மறை = எதனால் எனில், பிறர் தமக்கு மட்டும் நம்பிக்கையோடு சொன்ன ரகசியங்களை,• பிறர்க்கு உய்த்து உரைக்கலான் = தாமே தேடிப் போய் ஊரார் அனைவருக்கும் அம்பலப்படுத்திச் சொல்லிவிடுவதால்.

மு.வரதராசன்

கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.

பரிமேலழகர்

தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் கேட்ட மறைகளை இடந்தோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்; கயவர் அறை பறை அன்னர் - கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர். (மறை: வெளிப்படின் குற்றம் விளையும் என்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். பிறர், அம்மறைத்தற்குரியார். 'உய்த்து' என்றார், அவர்க்கு அது பெரும்பாரமாதல் நோக்கி. பறை ஒருவன் கையால் தன்னை அறிவித்ததொன்றனை இடந்தோறும் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்குமாகலான், இது தொழில் உவமம். இதனான் அவரது செறிவின்மை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.

Meaning in English

The base are like the beaten drum; for, when they hear The sound the secret out in every neighbour's ear

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout