நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்நெஞ்சத்து அவலம் இலர்.
nanRaRi vAriR kayavar tiruvuTaiyarnenjsat tavalam ilar
Nivas
பொருள் / உரை
முருகா எளிய உரை
எது அறம், எது பாவம் என்று ஆராய்ந்து வாழும் நல்லவர்களை விடக் கீழ்மக்களே கொடுத்து வைத்தவர்கள் என்று கேலியாகச் சொல்லலாம்; ஏனெனில், எந்தப் பாவத்தைச் செய்தாலும் தம் மனதில் சிறிதும் குற்ற உணர்ச்சியோ கவலையோ இல்லாமல் அவர்கள் திரிகிறார்கள்.
• நன்று அறிவாரின் = எது தர்மம், எது பாவம் என்று நன்மை தீமைகளை உணர்ந்து வாழும் சான்றோரை விட,• கயவர் = கீழ்மக்களே,• திரு உடையர் = மிகவும் பாக்கியவான்கள் ஆவார்கள் (என்று வஞ்சப் புகழ்ச்சியாகக் கூறலாம்);• நெஞ்சத்து அவலம் இலர் = ஏனெனில், அவர்கள் எதைப் பற்றியும் தம் நெஞ்சில் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் கவலையும் இல்லாதவர்களாகத் திரிகிறார்கள்.
Murugaa simple commentary
It can be said mockingly that base people are more fortunate than good people who live examining what is virtue and what is sin; because, whatever sin they commit, they wander without the slightest guilt or worry in their minds.
• Nanru arivarin = Than the noble people who live discerning good and evil as to what is dharma and what is sin,• Kayavar = Base people alone,• Thiru udaiyar = Are very fortunate (it can be said as ironical praise);• Nenjathu avalam ilar = Because, they wander without any guilt or worry in their hearts about anything.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.
பரிமேலழகர்
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் - தமக்குறுதியாவன அறிவாரின் அவையறியாத கீழ்மக்கள் நன்மையுடையார்; நெஞ்சத்து அவலம் இலர் - அவர்போல அவை காரணமாகத் தம்நெஞ்சத்தின்கண் கவலையிலராகலான். (நன்று என்பது சாதியொருமை. உறுதிகளாவன, இம்மை மறுமை வீடுகட்கு உரியவாய புகழ் அற ஞானங்கள். இவற்றை அறிவார் இதைச் செய்யாநின்றே 'மிகச் செயப்பெறுகின்றிலேம்' என்றும், செய்கின்ற இவைதமக்கு இடையூறு வருங்கொல் என்றும், இவற்றின் மறுதலையாய பழி பாவம் அறியாமை என்பனவற்றுள் யாது விளையுமோ என்றும் இவ்வாற்றான் கவலை எய்துவர்; கயவர் அப் புகழ்முதலிய ஒழித்துப் பழி முதலிய செய்யாநின்றும் யாதும் கவலை உடையரல்லராகலான், 'திருவுடையர்' எனக் குறிப்பால் இகழ்ந்தவாறு. இதனான் பழி முதலியவற்றிற்கு அஞ்சார் என்பது கூறப்பட்டது.)
Parimelazhagar
Compared to those who know what is good, the base are blessed with fortune: more than those who know the things that bring true benefit to themselves, the base people who do not know them possess goodness; they have no distress in their hearts: because, unlike those people, they have no anxiety in their hearts on account of those things. ('Good' is a singular noun denoting a class. The things of true benefit are fame, virtue, and wisdom, which belong to this life, the next life, and liberation. Those who know these, even while performing them, feel anxiety in these ways: thinking 'we are not able to do them abundantly', wondering whether obstacles might arise to these things they are doing, and wondering which among their opposites, namely blame, sin, and ignorance, might come about; whereas the base, abandoning fame and the rest, and even while committing blameworthy acts and the rest, have no anxiety whatsoever, and therefore are scorned by implication as 'blessed with fortune'. By this, it is stated that they do not fear blame and the rest.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
நல்லது கெட்டதை அறிந்தவரைக் காட்டிலும் கயவர் செல்வம் உடையவர் ஆவர்; காரணம், கயவர் நல்லத கெட்டது என்ற கவலையே நெஞ்சில் இல்லாதவர்.
Meaning in English
Than those of grateful heart the base must luckier be, Their minds from every anxious thought are free

