Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1071

பொருட்பால்ஒழிபியல்108. கயமை

மக்களே போல்வர் கயவர் அவரன்னஒப்பாரி யாங்கண்ட தில்.

makkaLE pOlvar kayavar avarannaoppAri yAngkaNTa til

Kurale Kavithaiyai

பொருள் / உரை

முருகா எளிய உரை

தீய எண்ணமும் குணமும் கொண்ட கீழ்மக்கள் வெளித் தோற்றத்தில் நல்ல மனிதர்களைப் போன்றே காட்சியளிப்பார்கள்; மனித வடிவத்தோடு அவர்கள் கொண்டுள்ள இந்த அச்சு அசல் போலி ஒற்றுமையைப் போன்ற ஒன்றை, உலகில் வேறு எந்த இருவகை உயிரினங்களிடத்திலும் காண முடியாது.

• கயவர் = தீய குணம் கொண்ட கீழ்மக்கள்,• மக்களே போல்வர் = வெளித் தோற்றத்தில் நல்ல மனிதர்களைப் போன்றே காணப்படுவர்;• அவர் அன்ன = அவர்கள் மனித உருவத்தோடு ஒத்துப் பொருந்தி இருப்பதைப் போன்ற,• ஒப்பாரி = மிக நுட்பமான போலி ஒற்றுமையை,• யாம் கண்டது இல் = உலகில் வேறு எந்த இருவகை உயிரினங்களிடத்திலும் நாம் கண்டதில்லை.

மு.வரதராசன்

மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.

பரிமேலழகர்

மக்களே போல்வர் கயவர் - வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்; அவர் அன்ன ஒப்பாரி யாம் கண்டது இல் - அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டதில்லை. (முழுதும் ஒத்தல் தேற்றேகாரத்தால் பெற்றாம். 'அவர்' என்றது அவர் மாட்டுளதாய ஒப்புமையை. மக்கட் சாதிக்கும் கயச்சாதிக்கும் வடிவு ஒத்தலின், குணங்களது உண்மை இன்மைகளானல்லது வேற்றுமை அறியப்படாது என்பதாம். இதனான் கயவரது குற்றமிகுதி கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை.

Meaning in English

The base resemble men in outward form, I ween; But counterpart exact to them I've never seen

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout