ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளிவந்த தில்.
AviRku nIren Rirappinum nAviRkiravin iLivanta til
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
தாகத்தால் தவிக்கும் ஒரு பசுவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அறத்தின் பெயரால் ஒருவரிடம் 'கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்' என்று கையேந்திக் கேட்டாலும் கூட, ஒரு மனிதனின் நாவிற்கு அந்த யாசகச் சொல்லை விடக் கேவலமான இழிவு வேறு எதுவும் இல்லை.
• ஆவிற்கு = தாகத்தால் தவிக்கும் பசுவின் உயிரைக் காப்பதற்காக,• நீர் என்று இரப்பினும் = அறநெறியோடு 'கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்' என்று அடுத்தவரிடம் கையேந்திக் கேட்டாலும்,• நாவிற்கு = அந்த மனிதனின் நாவிற்கு,• இரவின் = இரந்து கேட்கும் இழிவான சொல்லை விட,• இளிவந்தது இல் = இழிவான செயல் வேறு எதுவும் இல்லை.
மு.வரதராசன்
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.
பரிமேலழகர்
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு, அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்; இரவின் நாவிற்கு 'இளிவந்தது இல்' - அவ்விரவுபோல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை. (ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ள வேண்டாத எண்மைத்தாகலின் 'நீர்' என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல் அளவே ஆதலின் 'நாவிற்கு' என்றும்,அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளி வந்தது இல்' என்றும் கூறினார். இதனான் அறனும் முயன்று செய்வதல்லது இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.
Meaning in English
E'en if a draught of water for a cow you ask, Nought's so distasteful to the tongue as beggar's task





