தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுஉண்ணலின் ஊங்கினிய தில்.
teNNIr aTupuRkai Ayinum tALtantatuNNalin Ungkiniya til
Vedhika Umashankar
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன் சொந்த உடல் உழைப்பினால் தேடிப் பெற்றது தெளிந்த நீரைப் போன்ற எளிய கஞ்சியே என்றாலும், பிறரிடம் கையேந்தாமல் தன் உழைப்பில் கிடைத்த அந்த உணவை உண்பதைக் காட்டிலும் மேலான இன்பமும் சுவையும் இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை.
• தாள் தந்தது = தன் சொந்த உழைப்பால் தேடிக் கொண்டுவந்தது,• தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் = தெளிந்த நீர் போன்ற நீர்த்துக் கிடக்கும் கூழே ஆனாலும்,• உண்ணலின் = அதைத் தன் உழைப்பின் பயனாக உண்டு வாழ்வதைக் காட்டிலும்,• ஊங்கு இனியது இல் = மேலான சுவையும் இன்பமும் தருவது இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை.
மு.வரதராசன்
தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.
பரிமேலழகர்
தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கையாயினும் - நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர் போலும் அடுபுற்கையே யாயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல் - அதனையுண்டற்கு மேல் இனியது இல்லை. (தாள் தந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும்; இழிவாய இரவான் வந்ததன்றித் தம் உடைமையாகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாம். இதனான் நெறியினானாயது சிறிதேனும், அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.
Meaning in English
Nothing is sweeter than to taste the toil-won cheer, Though mess of pottage as tasteless as the water clear





