Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1063

பொருட்பால்ஒழிபியல்107. இரவச்சம்

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்வன்மையின் வன்பாட்ட தில்.

inmai iTumpai irantutIr vAmennumvanmaiyin vanpATTa til

Gayathri

பொருள் / உரை

முருகா எளிய உரை

வறுமையால் ஏற்பட்ட துயரத்தைத் தன் சொந்த உழைப்பால் தீர்க்க எண்ணாமல், பிறரிடம் கையேந்திப் பிச்சையெடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் முரட்டுத்தனமான சோம்பேறி நெஞ்சத்தைக் காட்டிலும் கொடிய அறியாமை வேறு எதுவும் இல்லை.

• இன்மை இடும்பை = வறுமையால் வந்த துன்பத்தை,• இரந்து தீர்வாம் என்னும் = உழைக்காமல் பிறரிடம் கையேந்திக் கேட்டுப் போக்கிக் கொள்வோம் என்று எண்ணும்,• வன்மையின் = கல் நெஞ்ச முரட்டுத்தனத்தைக் காட்டிலும்,• வன்பாட்டது இல் = கொடிய மன வலிமை வேறு எதுவும் இல்லை.

மு.வரதராசன்

வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.

பரிமேலழகர்

இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின் - வறுமையான் வருந்துன்பத்தை முயன்று நீக்கக்கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல; வன்பாட்டது இல் - வலிமைப்பாடுடையது பிறிது இல்லை. (நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவான் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று, வன்பாடு - முருட்டுத் தன்மை அஃதாவது, ஓராது செய்து நிற்றல். இதனான் 'வறுமை தீர்த்தற்கு நெறி இரவன்று' என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.

Meaning in English

Nothing is harder than the hardness that will say, 'The plague of penury by asking alms we'll drive away.'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout