இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்மரப்பாவை சென்றுவந் தற்று.
irappArai yillAyin IrngkaNmA njAlammarappAvai senRuvan taRRu
Sheeba Prem
பொருள் / உரை
முருகா எளிய உரை
உலகில் வறுமையால் உதவி கேட்டு வருபவர்கள் என்று எவருமே இல்லாமல் போய்விட்டால், பரந்த இந்த உலகில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை, உயிரில்லாத மர பொம்மைகள் கயிற்றின் இயக்கத்தால் அங்கும் இங்கும் சென்று வருவதைப் போல ஈகை மற்றும் கருணையற்ற வெறும் இயந்திரப் போக்குவரத்தாகவே மாறிவிடும்.
• இரப்பாரை இல்லாயின் = உலகத்தில் வறுமையுற்று உதவி கேட்பவர்கள் எவருமே இல்லை என்று ஆகிவிட்டால்,• ஈர்ங்கண் மா ஞாலம் = குளிர்ச்சியும் வளமும் பொருந்திய இந்தப் பெரிய உலகத்தில் வாழும் மனிதர்களின் நடமாட்டம்,• மரப்பாவை சென்று வந்தற்று = உயிரற்ற மர பொம்மைகள் கயிற்றால் இழுக்கப்பட்டு அங்கும் இங்கும் சென்று வந்ததைப் போல உணர்ச்சியற்றதாகிவிடும்.
மு.வரதராசன்
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
பரிமேலழகர்
இரப்பார் இல்லாயின் - வறுமையுற்று இரப்பார் இல்லையாயின்; ஈர்ங்கண்மா ஞாலம் - குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள்; மரப்பாவை சென்று வந்தற்று - உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற்போலும். (ஐகாரம், அசைநிலை. ஞாலம் என்னும் ஆகுபெயர்ப் பொருட்கு உவமையோடு ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளார் என்றது அவரை ஒழிந்தாரை. அவர்க்கு ஈதலைச் செய்து புகழும் புண்ணியமும் எய்தாமையின், உயிருடையரல்லார் என்பதாம், 'ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து, வாழ்வாரே வன் கணவர்', என்றார் பிறரும்: இத்தொடையின்பம் நோக்காது 'இரப்பவர் இல்லாயின்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
சாலமன் பாப்பையா
பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.
Meaning in English
If askers cease, the mighty earth, where cooling fountains flow, Will be a stage where wooden puppets come and go





